• Login / Register
  • செய்திகள்

    பிரிட்டன் அரசிக்கு கொரோனா; அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து!

    பிரிட்டன் அரசி கமிலாவுக்கு 2வது தடவையாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் பங்கேற்க இருந்த அனைத்து பொதுநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். 

    இந்நிலையில், ராணி கமிலாவுக்கு காய்ச்சல், இருமல் என "பருவகால" நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனாபரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனாதொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. 

    இதுகுறித்து பிரிட்டன் அரண்மனை வெள்ளியிட்டுள்ள அறிக்கையில்,

    ராணி கமிலாவுக்கு கொரோனாதொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட் பாலே பள்ளியின் நூற்றாண்டு விழா உள்ளிட்ட, ராணி பங்கேற்க இருந்து அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு நடக்க இருந்த பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாததற்கு ராணி வருத்தம் தெரிவித்துள்ளார். 

    ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்று நம்புவதாக பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

    75 வயதான ராணி கமிலா கொரோனா தொற்று எதிராக முழுமையான தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் தொற்று பாதிப்புக்கு ஆளானர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment