• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த வாரம் எப்படி..? துலாம் - மீனம் ராசிகளுக்கான பலன்கள்!

    25/03/2024 முதல் 31/03/2024 வரையான இந்த வாரத்திற்கான துலாம் - மீனம் ராசிகளுக்கான ராசிபலன்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வந்து சேர்வார்கள்.

    வேலையை பொருத்தவரை நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பதவி உயர்வு இடமாற்றம் போன்றவை நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணம் முயற்சிகள் சாதகமாக அமையும். எந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் நிதானத்துடன் செயலாற்றுவது நன்மையை தரும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். ஒரு சிலர் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணத்தில் வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்திற்கு மாறுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையைத் தரும். மூன்றாவது நபரால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் கவனம் செலுத்தி செயலாற்றினால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை கடின உழைப்பிற்கு ஏற்ற லாபமே கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வயதில் மூத்தவர்களிடம் பேசும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் பேசுவது நன்மையை தரும்.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கும், பதவி உயர்வு, சம்பள உயர்விற்காக காத்திருப்பவர்களுக்கும் நல்ல செய்தி வந்து சேரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட லாபம் அதிகமாகவே கிடைக்கும். இதுவரை இருந்து வந்த மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ செலவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். முடிந்த அளவிற்கு கடன் வாங்காமல் தவிர்க்க வேண்டும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை கூடுதலாகவே இருக்கும். வேலையில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். உடன் பணி புரிபவர்களுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். இருப்பினும் கடன் வாங்கி முதலீடு செய்வதையோ அல்லது கடன் வாங்கி தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியிலோ ஈடுபடாமல் இருப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது, கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சுப செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். யாரையும் நம்பி எந்த பொறுப்பையும் தராமல் தாமே செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டும். தொழிலை விரிவுபடுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு கிருஷ்ணரை வழிபட வேண்டும்.

    Leave A Comment