• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த வாரம் எப்படி..? துலாம் - மீனம் ராசிகளுக்கான பலன்கள்!

    18/03/2024 முதல் 24/03/2024 வரையான இந்த வாரத்திற்கான துலாம் - மீனம் ராசிகளுக்கான ராசிபலன்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

    வேலையைப் பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்து முடித்து விரும்பிய சலுகைகளை பெறுவீர்கள். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவு அனுகூலம் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனமாக செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறு உபாதையாக இருந்தாலும் உடனே சென்று மருத்துவரை பார்ப்பது பெரிய விளைவுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். கூடுதல் கவனம் செலுத்தி யாரிடமும் வேலையை ஒப்படைக்காமல் தாமே செய்வதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படாது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மறைமுக எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் நடைபெறும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்ப்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி நிம்மதியான சூழ்நிலை உண்டாகும்.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்காது. நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். புதிதாக எந்த முயற்சிகளிலும் இந்த வாரம் ஈடுபட வேண்டாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்புகள் உள்ளது. எவ்வளவு செலவுகள் வந்தாலும் அதை எளிதில் சமாளித்து விடுவீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமண முயற்சிகள் வெற்றி பெறும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். புதிதாக எந்த வேலைக்கும் முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிதாக எந்த முதலீடும் செய்யாமல் இருப்பது நன்மையைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல செய்தி வந்து சேரும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். அதே சமயம் எதிர்பாராத செலவுகளும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். புதிதாக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். சாமர்த்தியமாக வேலையை செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளை பெறுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். அதனால் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பாராத பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. இதனால் பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பொறுமையாக செல்ல வேண்டும். திருமணம் முயற்சிகள் வெற்றியைத் தரும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறமையுடன் செய்து முடிப்பதன் மூலம் சலுகைகளும் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெற்றியும் அடைவீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

    Leave A Comment