• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த வாரம் எப்படி..? மேஷம் - கன்னி ராசிகளுக்கான பலன்கள்!

    18/03/2024 முதல் 24/03/2024 வரையான இந்த வாரத்திற்கான மேஷம் - கன்னி ராசிகளுக்கான ராசிபலன்.

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்க்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் வரும். தேவையில்லாத கோவத்தால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கோபத்தை தவிர்த்து பொறுமையை கடைப்பிடிப்பது நன்மையை தரும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். சலுகைகள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிதாக முதலீடு செய்வதை தவிர்ப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்மனை வழிபட வேண்டும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நற்பலன்களைப் பெரும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நன்மையை தரும். கடன்களை தீர்ப்பதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் சாதகமான சூழ்நிலையே நிலவும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நினைத்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுப காரியம் நடைபெறும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிகளவு பண வரவு ஏற்பட்டாலும் செலவுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்து சென்ற உறவுகள் விரும்பி வந்து சேர்வார்கள்.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. இதுவரை தடைபட்டிருந்த சலுகைகள் அனைத்தும் தேடி வரும் வாய்ப்புகள் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களில் வெற்றிகள் கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இடையூறுகள் நீங்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பண வரவு ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். இருப்பினும் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனமாக செயல்பட வேண்டும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாக இருக்கும். இதுவரை வேலையில் இருந்து வந்த தடைகள் தளர ஆரம்பிக்கும். ஒரு சிலருக்கு பணி மாற்றமோ இடமாற்றமோ ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்காக சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இதுவரை தொழில் ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வாக்குவாதங்களை தவிர்க்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. உடல் நலனில் கவனம் தேவை. சிறு உபாதையாக இருந்தாலும் உடனே சரி செய்து கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். பிறரிடம் பேசும் பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். சக ஊழியர்களின் உதவியால் அந்த வேலையை திறம்பட செய்து முடிக்கலாம். இருப்பினும் உயர் அதிகாரிகளுடன் பேசும் பொழுது கவனமுடன் பேச வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க சற்று கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலை மேம்படுத்த செய்யும் முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் விடா முயற்சியுடன் செயலாற்றும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். திடீர் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மூன்றாவது நபரின் தலையிட்டால் கணவன் மனைவிக்குள் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கவனம் தேவை. பயணங்களை மேற்கொள்ளும் பொழுது உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. விரும்பிய வேலை கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் தேடி வரும். ஒரு சிலருக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். இதனால் தொழிலில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

    Leave A Comment