• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த மாதம் எப்படி இருக்கு..? பெப்ரவரி மாத ராசிபலன் 2024!

    தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கான பெப்ரவரி மாதத்திற்கான ராசி பலன்கள்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கோபத்தை தவிர்க்க வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிகமான பண வரவு ஏற்படும். அதே சமயம் செலவுகளும் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாருடன் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்வது நன்மையை தரும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் ஒத்துழைத்து செயலாற்றி அந்த பணியை முடிப்பதன் மூலம் நன்மைகள் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க வேண்டும் என்றால் அதற்காக கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது கவனத்துடன் செயலாற்றுவது நன்மையை தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டகரமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவைவிட அதிகளவு பண வரவு ஏற்படும். வராது என்று நினைத்த பணமும் வந்து சேரும். உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் புதிதாக முயற்சிகளை மேற்கொள்வதை மட்டும் தவிர்ப்பது நன்மையைத் தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பிரத்தியங்கரா தேவியை வழிபட வேண்டும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உற்சாகத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு விபரீத ராஜயோகம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். பணரீதியான பரிவர்த்தனை செய்யும் பொழுது கவனமாக கையாள வேண்டும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். பொறுப்புடன் செய்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தங்களுக்கு கீழ் பணி புரிபவர்களை கண்காணிப்பது தொழிலை நஷ்டம் அடையாமல் பார்த்துக் கொள்ளும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றிகள் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகளும் இருக்கிறது. உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சேமிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது நன்மையை தரும்.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. கடினமான வேலையையும் எளிதில் செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்கான அடுத்த கட்ட முயற்சியை மேற்கொள்வீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வாராகி அன்னையை வழிபட வேண்டும்.

    Leave A Comment