• Login / Register
  • செய்திகள்

    தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. கொரோனா சூழல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் இருந்தன.

    இந்த நிலையில், 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதாமல் மாணவர்கள் நேரடியாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவுள்ளனர்.

    3,119 தேர்வு மையங்களில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுதுகின்றனர்.

    இது தவிர தனித் தேர்வர்கள் 28,353 பேரும், மாற்றுத்திறனாளிகள் 3,638 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும், சிறைக்கைதிகள் 73 பேரும் எழுதுகின்றனர்.

    தேர்வில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக 1000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

    மாணவர்களுக்கு, முதல் 15 நிமிடங்கள் வினாத்தாள் படிக்கவும், அடுத்த மூன்று மணி நேரங்கள் தேர்வு எழுதவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன.

    மாணவர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டுதலுடன் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    பொதுத் தேர்வுகளை முன்னிட்டு அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

    அமைச்சர் ஆய்வு: -

    இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை சாந்தோம் பள்ளியில், தேர்வு மையத்தை நேரில் பார்வையிட்டார்.

    மாணவர்களை தைரியமாக தேர்வு எழுத தனது வாழ்த்துகளை அவர் தெரிவித்துக் கொண்டார்.


    Leave A Comment