• Login / Register
  • செய்திகள்

    விடை சொல்லிக்கொடுக்காத நண்பன் மீது கத்திக்குத்து: மஹாராஷ்டிராவில் பயங்கரம்

    மஹாராஷ்டிராவில் பரீட்சையில் விடைத்தாளை காட்ட மறுத்த சக மாணவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரும் போது, மகாராஷ்டிர மாநிலம் தானே மாவத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சக மாணவரை கத்தியால் குத்தியதாக காவலர்கள் தெரிவித்தனர்.

    பிவண்டி பகுதியைச் சேர்ந்த அவர்கள் செவ்வாய்க்கிழமை 10-ம் வகுப்பு தேர்வு எழுதும்போது தங்களுக்கு தேர்வுத் தாளை காண்பிக்கவில்லை என்பதால் சக மாணவரைக் கத்தியால் தாக்கியுள்ளனர்.

    பள்ளி இறுதி வகுப்புத் தேர்வின்போது தாக்கப்பட்ட மாணவன் விடைத்தாளை காண்பிக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மற்ற 3 மாணவர்கள், அந்த மாணவர் தேர்வறையை விட்டு வெளியே வரும்போது அவரை பிடித்துவைத்து தாக்கியுள்ளனர். மேலும், கத்தியால் குத்தினர், காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனக் காவலர்கள் தெரிவித்தனர்.

    காயம்பட்ட மாணவர் மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ளார். தாக்கிய 3 பேரின் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 324-ன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக சாந்தி நகர் காவலர்கள் தெரிவித்தனர்.


    Leave A Comment