• Login / Register
  • மேலும்

    குழந்தைகளுக்கு அசைவம்: எந்த வயதில்.., என்ன கொடுக்கலாம்..!?


    குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது எவ்வளவு சிரமமோ, எதை கொடுப்பது என்பதும் நிறைய பெற்றோருக்கு பெரும் பிரச்சனைதான், அதிலும் அசைவம் என்று வரும்போது எப்போது கொடுப்பது, கொடுப்பது என்ற நிறைய கேள்விகள் இருக்கும்.

    அசைவ உணவுகள் குழந்தைகளுக்கு எப்போது கொடுக்க வேண்டும். எப்படி படிப்படியாக அதைத் தொடங்க வேண்டுமென சில வழிமுறைகள் உண்டு.

    அசைவத்தில் முதலில் குழந்தைக்கு முட்டையிலிருந்து ஆரம்பியுங்கள். குழந்தைக்கு ஒரு வயது ஆன பின்பே அசைவ உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

    முட்டை கொடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீன் உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

    அடுத்ததாக சிக்கன் உணவுகளைக் கொடுக்கலாம். அதிலும் சூப் வகைகளைக் கொடுப்பது நல்லது. சில சமயம் திடீரென குழந்தைகள் அசைவம் சாப்பிடும் போது வயிற்றுப் பொருமல், வலி உண்டாகும்.

    சில குழந்தைகள் புதிய வித்தியாசமான சுவையாக இருப்பதால் சாப்பிட மறுக்கும். அதனால் சூப் வகைகள் கொடுத்துப் பழகிய பின், சிக்கன் போன்ற திட உணவுகளைக் கொடுக்கப் பழகலாம்.

    மட்டன்(ஆட்டிறைச்சி) இரண்டு வயது ஆன பிறகு கொடுப்பது நல்லது. ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும்.  



    அசைவ உணவுகளில் இருந்து குழந்தைகளுக்கு என்ன கிடைக்கிறது?

    மீன்: மீன் உணவுகள், வளர்கிற குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு என்றே சொல்லலாம். மீனில் அதிகமான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் இருக்கிறது. முக்கியமாக மீனில், ஒமேகா 3 இருக்கிறது. ஒமேகா 3 இதயத்திற்கு மிகவும் நல்லது, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. மீன் உணவுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. மீனில் இருக்கின்ற ஒமேகா 3, வைட்டமின் கே குழந்தைகளின் மூளை வளர்சிக்கும், கண்ணிற்கும் மிகவும் நல்லது.

    குழந்தைகளின் கவனிக்கும் திறனும் அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைப்பதற்கும் மீன் மிகவும் நல்லது. எலும்பு வலுபெறவும், மூட்டுகளில் வலுப்பெறவும், புற்றுநோயில் இருந்து பாதுகாக்கவும் மீன் உதவுகிறது. வாரத்துக்கு 3 முறை மீன் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய், தொண்டை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் எல்லாம் வராமல் பாதுகாக்கிறது.

    சிக்கன்: சிக்கனில் அதிகப்படியான புரதங்கள் இருக்கிறது. குழந்தைகள் வலுவாக மற்றும் உயரமாக வளருவதற்கும் தேவையான அமினோ அமிலங்கள் சிக்கனில் இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு கொஞ்சம் சிக்கன் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும். இதனால் தான் சிக்கன் சாப்பிட பிறகு குழந்தைகள் நொறுக்குத் தீனிகளை சாப்பிடமாட்டார்கள்.

    மட்டன்: மட்டன் குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது. ஏனென்றால், மட்டனில் அதிகபடியான நிறைவுற்ற கொழுப்பு இருக்கிறது. இப்பொழுது இல்லை என்றாலும் பிற்காலத்தில் உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.



    Leave A Comment