• Login / Register
  • சினிமா

    மாங்கா காமிக்ஸ்களை உருவாக்கிய அகிரா டோரியாமா காலமானார்!


    உலகின் பிரபல ‘டிராகன் பால்’ உள்ளிட்ட  ஜப்பானிய மாங்கா காமிக்ஸ்களை உருவாக்கிய அகிரா டோரியாமா காலமானதாக அவரது ஸ்டூடியோ வெள்ளிக்கிழமை அறிவித்தது.

    மார்ச் 1-ம் தேதி 68 வயதான அகிரா டோரியாமா மூளையில் ஏற்பட்ட இரத்த அடைப்பால் உயிரிழந்ததாக பேர்ட் ஸ்டூடியோ நிறுவனம் தெரிவித்தது.

    1984-ல் தொடங்கிய இவரது ‘டிராகன் பால்’ காமிக்ஸ் தொடர் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொலைக்காட்சி தொடர்களாகவும் விடியோ விளையாட்டுகளாகவும் படமாகவும் மாற்றப்பட்டது.

    இது குறித்து “பல தொடர்களில் அவர் பணியாற்றி வந்தார். நிறைவு செய்ய வேண்டிய வேலைகள் குறித்து அவர் நிறைய எதிர்பார்ப்பு கொண்டிருந்தார்” என பேர்ட் ஸ்டூடியோ தெரிவித்துள்ளது.

    1955-ல் ஜப்பான் நாட்டில் ஐச்சி மாகாணத்தில் பிறந்த அகிரா, 1978-ல் ‘வாண்டர் ஐலேண்ட்’ என்கிற காமிக்ஸ் தொடர் மூலம் அறிமுகமானார்.

    பெரியளவில் இந்த தொடர் வெற்றி பெற்று அகிரா புகழ் வெளிச்சத்துக்கு வந்தபோதும் அவர் தனித்தே இருந்தார்.

    அவர், ‘மாங்கா எழுதிக் கொண்டிருப்பது மட்டும் எனக்கு போதுமானது” என 1982-ல் பேட்டி அளித்துள்ளார்.

    ‘டிராகன் பால்’ என்பது சோன் கோகு என்கிற பையனின், நாம் விரும்புவதை நிறைவேற்றும் ஏழு மாய பந்துகளுக்கான தேடலை மையப்படுத்திய கதை. உலகம் முழுவதும் 26 கோடி பிரதிகள் விற்றது.

    2000-ல் இவர் உருவாக்கிய ‘சாண்ட் லேண்ட்’ என்கிற கதையைத் தழுவி உருவான அனிமேஷன் படம் டிஸ்னி பிளஸில் இந்தாண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    Leave A Comment