• Login / Register
  • விளையாட்டு

    WTA எலைட் கோப்பை: பியாட்ரிஸ் ஹட்டாட் மாயா சாம்பியன்

    WTA எலைட் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியில் பிரேஸிலின் பியாட்ரிஸ் ஹட்டாட் மாயா  சாம்பியன் பட்டம் வென்றாா்.

    சீனாவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த அவா் 7-6 (13/11), 7-6 (7/4) என்ற செட்களில், 7-ஆம் இடத்திலிருந்த கின்வென் ஜெங்கை வீழ்த்தினாா். இதன் மூலம் மாயா தனது 3-ஆவது டபிள்யூடிஏ பட்டத்தை வென்றிருக்கிறாா். 2 மணி நேரம் 51 நிமிஷங்கள் நீடித்த இந்த ஆட்டம், நடப்பாண்டு WTA  டூா் போட்டிகளில், நோ் செட்கள் கொண்ட மிக நீண்ட நேர இறுதி ஆட்டமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    250 புள்ளிகளுக்கு மேல் கொண்ட போட்டியிலும், ஹாா்டு கோா்ட் போட்டியிலும் மாயா கோப்பை வென்றது இதுவே முதல் முறையாகும்.

    இப்போட்டியின் இரட்டையா் பிரிவிலும் பியாட்ரிஸ் ஹட்டாட் மாயா, ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவாவுடன் இணைந்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றினாா். போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்த இணை 6-3, 6-3 என்ற நோ் செட்களில் ஜப்பானின் மியு காட்டோ/இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி கூட்டணியை சாய்த்தது.






    Leave A Comment