ஐஃபோன் பாவனையாளர்களுக்கு வந்த புதிய சிக்கல்: குவியும் புகார்கள்
ஆப்பிள் ஐஃபோன்களில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுவது வாடிக்கைதான். இந்நிலையில் ஐஃபோன்களில் அலாரம் வேலை செய்யவில்லையாம். இதனால், உலகின் பல பகுதிகளில் இருந்தும் புகார்கள் குவிகின்றன.
ஆப்பிள் ஐஃபோன்களில் கடந்த ஒரு சில நாள்களாக அலாரம் செயலிழந்துவிட்டதால், அதனைப் பயன்படுத்துவோர் தாமதமாக எழுந்து, தாமதமாகவே அலுவலகம் செல்வதாகக் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளன.
ஆனால், இதுதான் முதல் முறை, ஐஃபோனில் அலாரம் வேலை செய்யவில்லை என்று இந்த அளவுக்கு புகார்கள் குவிவது என்கிறது ஆப்பிள் நிறுவனம்.
அதாவது, ஐஃபோனில் இருக்கும் கடிகார செயலி வேலை செய்யவில்லை. இதனால், அலாரம் அடிக்க வேண்டிய நேரத்தில், அது ஒலி எழுப்புவதில்லை, அல்லது அலாரம் வைத்திருக்கும் நேரத்தில் செல்ஃபோன் ஒலிப்பதில்லை என்று வாடிக்கையாளர்கள் கதறுகிறார்கள்.
சமூக வலைத்தளமான ரெட்டிட் தளத்தில், ஐஃபோன் பயனாளர்களின் புகார்கள் தொடர்ந்து குவிந்து வருகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்றும், ஐஓஎஸ் அப்டேட் செய்ததும் அலாரம் சரியாகவிடும் என்றும் ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்து வருகிறது.
Leave A Comment