நாம் தமிழர் கட்சி தமிழர்களின் உரிமைக்குரல்; எவராலும் அழிக்கவே முடியாது - அய்யநாதன்!
மாற்று அரசியலுக்கான புரட்சியாக மக்கள் பேராதரவு பெற்று தமிழர்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து வரும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியை அண்ணாமலை மட்டுமல்ல எவர் வந்தாலும் அழிக்கவே முடியாது என எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகர் அய்யநாதன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் முடக்கப்பட்டு வேறு ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையத்தினால் வழங்கப்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியை ஒழிப்பதற்கு மத்திய மாநில கட்சிகள் முன்னெடுத்து வரும் சதிச்செயல்கள் குறித்து பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் TNMedia24 வலையொளி பக்கத்திற்கு பிரத்தியேகமாக வழங்கிய நேர்காணலின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
30 இலட்சத்திற்கு மேற்பட்ட சுமார் 8 சதவீத வாக்குகளை பெற்ற ஒரு கட்சியின் சின்னத்தை ஒரு தொகுதியில் கூட நின்று வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆகாத யாருக்குமே தெரியாத அறிமுகம் இல்லாத கட்சிக்கு 11 மாநிலங்களில் 10 மாநிலங்களில் ஒதுக்கியமை எவ்வித அடிப்படையுமற்ற செயல்.

தமிழ்நாட்டில் உள்ள சகல தொகுதிகளிலும் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி வளரும் தறுவாயில் மேலும் வளர்ச்சியடையக் கூடிய நிலையில் உள்ள கட்சியின் சின்னனத்தை கேள்விக்குள்ளாக்கியமை ஏற்றுக்கொள்ளகூடிய நடைமுறை இல்லை.
இதன் மூலம் தேர்தல் ஆணையம் கைப்பாவையாக செயற்படுகின்றதா என்ற கேள்வி எழுகிறது.
நாம் தமிழர் கட்சியை ஒழிப்பதற்கான திட்டம் தீட்டப்படுகிறது. அதனடிப்படையில் சின்னம் தொடர்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை காரணம் காட்டி சின்னத்தை முடக்கி வேறு ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா மற்றும் திமுக கட்சிகள் நாம் தமிழர் கட்சியை முடக்குவதற்கு தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் - பாஜக, திமுக - அதிமுக ஆகிய நான்கு கட்சிகளுக்கு மாற்று என்பது நாம் தமிழர் கட்சி என்ற நிலை உருவாகியுள்ளது. நாம் தமிழர் கட்சி தமிழர்களின் உரிமைக்குரல். தமிழீழ விடுதலைக்கான குரல். தமிழக மீனவர்களுக்கான உரிமைக்குரல். இப்படியாக தமிழர்களின் உரிமைக்குரலாக ஒலித்துக் கொண்டிருக்கக் கூடிய நாம் தமிழர் கட்சி மக்கள் ஆதரவுடன் வளர்ந்து வருவதனை தடுக்க நினைக்கும் மத்திய, மாநில கட்சிகளான பாஜக மற்றும் திமுக கட்சிகள் இதனை முன்னெடுத்துள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள மாநில தேசிய கட்சிகளுக்கு மாற்றாக மாற்று அரசியலின் அடையாளமாக, மக்களின் தெரிவாக நம்பிக்கையாக வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சிக்கான வாக்ககளை எவராலும் தடுக்கவே முடியாது.
மாற்று அரசியல் சக்தியாக தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தமிழரான சீமானின் குரலை முடக்குவதற்காககவே அத்தனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சின்னத்தை முடக்கிவிட்டால் நாம் தமிழர் கட்சியை வீழ்த்திவிட முடியாது. ஒரு நாள் போதும். புதிய சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வல்லமை நாம் தமிழர் கட்சியினரிடம் உள்ளது.
தமிழ்நாட்டில் மாற்று அரசியலை எதிர்பார்த்துள்ள மக்களின் ஒரே தெரிவாகவும், நம்பிக்கையாகவும் உள்ள நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க காத்திருக்கும் மக்களிடையே அக்கட்சியின் சின்னம் தொடர்பான எதிர்பார்ப்பு உள்ளது. அதனால் உடனடியாகவே புதிய சின்னம் வழங்கப்பட்டாலும் உடனடியாக அவர்களிடம் சென்றுசேர்ந்துவிடும்.
மற்றுமொரு கட்சியாக அல்லாமல் மாற்று அரசியலுக்கான புரட்சியாக நாம் தமிழர் கட்சி நம்பிக்கையை பெற்றுள்ளதன் வெளிப்பாடே திராவிட மற்றும் தேசிய கட்சிகளை போன்று பணம் மற்றும் அன்பளிப்பு பொருட்களை வழங்காமலேயே பெருமளவான வாக்குகளை பெறுவதற்கு காரணம்.
தமிழ்நாட்டில் உள்ள எந்த கட்சிக்கும் இல்லாத வல்லமை நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே உண்டு. அந்த வகையில் சின்னத்தை முடக்குவதனால் நாம் தமிழர் கட்சியை ஒருபோதும் முடக்கிவிட முடியாது.

தமிழன் என்ற பெரும் நாகரீகத்தினுடைய மிகப்பெரிய அரசியல் தோற்றுவாயாக நாம் தமிழர் கட்சி உருவாகியுள்ளது. ஈழத்திலே எமது இனம் அழிக்கப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்தி எமது இனத்தை காப்பாற்றுவதற்கு நமக்கென்று ஒரு அரசியல் இல்லை என்ற வேட்கையில் முகிழ்ந்த ஒரு அரசியில் இயக்கமே நாம் தமிழர் கட்சி.
நாம் தமிழர் கட்சியை அண்ணாமலையோ எவர் வந்தாலும் அழிக்கவே முடியாது.
இலத்திரணியல் வாக்கு இயந்திரமே நாம் தமிழர் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும். நாம் தமிழர் கட்சிக்கு விழும் வாக்குகளை மோசடி செய்து பாஜகவுக்கு மாற்றும் நம்பிக்கையில் தான் அண்ணாமலை 30 இலட்சம் வாக்குகள் கிடைக்கும் என ஆணித்தரமாக கூறுவதற்கு காரணம். என்று தெரிவித்தார்.
குறித்த நேர்காணலை முழுமையாக காண்பதற்கு....
https://www.youtube.com/watch?v=C2B2Q0CkHsY
Leave A Comment