இந்த மாதம் எப்படி இருக்கு? மே மாத ராசிபலன்கள்!
பிறந்துள்ள மே மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில், சிம்மம் - விருச்சிகம் வரையான நான்கு ராசியினருக்கும் மே மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வளர்ச்சி மிகுந்த மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் அந்த பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். புதிதாக எந்த பொருளையும் வாங்காமல் தள்ளி போடுவது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக ஆலோசனை பெற்ற பிறகு எடுப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். யாரையும் நம்பி வேலையை ஒப்படைக்காமல் தாமே செய்வது நன்மையை தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று சிரமமாக இருக்கும். தொழிலை விரிவு படுத்துவதற்காக எந்தவித முதலீடுகளை செய்வதை தவிர்ப்பது நல்லது.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் மாதமாக திகழப்போகிறது. இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் மாதமாகவும் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகளில் இருந்து விடுபடும் மாதமாகவும் வெற்றிகள் பெரும் மாதமாகவும் திகழும். குடும்ப உறுப்பினர்களிடம் கோபத்தை காட்டுவதை தவிர்ப்பது நல்லது. கடன் சுமை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். சுப செலவுகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை ஒரு சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. வேலை நிமிர்த்தமாக திடீர் பயணங்களை சந்திக்கலாம். அலுவலகத்தில் தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை தரும். தொழிலைப் பொருத்தவரை தொழிலில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சில தடைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாக்கும். இருப்பினும் எதிர்பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் செயல்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சற்று எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். திருமணத்திற்காக முயற்சி செய்பவர்கள் தங்களுடைய தீவிர தேடுதலின் அடிப்படையிலேயே நல்ல வரன் கிடைக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதில் அனைத்து முயற்சிகளையும் செலுத்தி செம்மையாக அந்த வேலையை செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளை பெற முடியும். தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் ஏற்பட்டாலும் புதிதாக தொழிலை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் செலவுகள் அதிகம் இருக்கும். தொழில் ரீதியாக எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாகவும் தக்க ஆலோசனை பெற்று எடுப்பது நன்மையை தரும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சற்று கவனத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பொறுமையை கடைப்பிடித்து செயலாற்றுவதன் மூலம் பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக் கொள்ள முடியும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்க்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலர் வாங்கிய கடனை அடைக்க முயற்சி செய்வார்கள்.
வேலையை பொருத்தவரை நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். இது நாள் வரை செய்த கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக திகழப்போகிறது.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.
Leave A Comment