• Login / Register
  • சோதிடம்

    குரு பெயர்ச்சி 2024: 12 ராசிகளுக்குமான பலன்கள் ஒரே வரியில்!

    நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் தான் இந்த குரு பகவான். ஒருவர் செல்வ செழிப்புடன் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், சமூகத்தில் நல்ல அந்தஸ்து என அனைத்து வித சௌபாக்கியத்துடன் வாழ காரணியாக இருப்பவர் இந்த குருபகவான்.

    இவர் ஆண்டிற்கு ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். இந்த குரு பகவானின் மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் எப்பொழுதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

    தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் மே மாதம் 01 ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார் இதன் மூலம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் மாற்றம் உண்டு.

    2024 மே 1ம் தேதி நடக்க உள்ள குரு பெயர்ச்சி மூலம் 12 ராசிகளுக்கு நடக்க போகும் பலன்களை ஒரே வரியில் பார்க்கலாம்.

    மேஷம்: இத்தனை காலம் பட்ட கஷ்டம், துன்பம் எல்லாம் போய் நீங்கள் கோடி கோடியாக சம்பாதிக்கும், இழந்ததை எல்லாம் மீட்கும் நல்ல காலம் வரப்போகிறது.

    ரிஷபம்: உங்கள் ராசிக்கு வரப்போகும் குரு கடந்த ஒரு வருடமாக நீங்கள் பட்ட கஷ்டங்களை தீர்த்து புதிய வாழ்க்கையை கொடுப்பார்.

    மிதுனம்: நிலம், வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்க்கவும், விவகாரம் உள்ள நிலங்களை வாங்க வேண்டாம்.

    கடகம்: பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு, உங்கள் வேலையில் நல்ல கவனத்துடன் இருக்கவும், இல்லையென்றால் வேலை போகும் ஆபத்தும் உள்ளது.

    சிம்மம்: உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள், லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு.

    கன்னி: உங்கள் வாழ்க்கையே மாறப்போகிறது, அதிர்ச்சிக்காரர்களா ஆகப்போகிறீர்கள்.. நீங்கள் தொட்டத்தில எல்லாம் குபேர அதிர்ஷ்டம் அடிக்கும்.

    துலாம்: வேலையில் முன்னேற்றம் வரும், உடல் நலனில் அக்கறை காட்டவும், வெளிநாடு போகும் வாய்ப்புகள் வரும்.

    விருச்சிகம்: விருச்சிகம் அடித்து தூள் கிளப்பும், வீடு கட்டலாம், நிலம் வாங்கலாம், தங்கம் வாங்கும் வாய்ப்பு வரும்.

    தனுஷ்: அகலக்கால் வைக்க வேண்டாம், நில விஷயங்கள் கவனமாக இருங்கள், முதலீடுகளை பார்த்து செய்யுங்கள்.

    மகரம்: குரு பெயர்ச்சி உங்களுக்கு அவ்வளவு பெரிய மாற்றத்தை கொடுக்காது, எடுக்க போகும் முடிவுகளை கவனமாக எடுங்கள்.

    கும்பம்; உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள், பேசுவதில் கவனமாக பேசுங்கள், வேலை வாய்ப்பில் அசத்தல் மாற்றம் வரப்போகிறது.

    மீனம்: 5 வருடங்களாக உங்களுக்கு இருந்த மண வாழ்க்கை பிரச்சனை, திருமண வாழ்க்கை பிரச்சனை எல்லாம் சரியாகும்.

    ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் படி தொகுக்கப்பட்ட பலன்களாகும். உங்கள் உங்கள் சுய ஜாதக அடிப்படையில் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.

    ஜோதிட நம்பிக்கை உள்ளவர்கள் இதனை பின்பற்றுங்கள்.

    Leave A Comment