48 ஆவது அகவையில் தமிழீழ விடுதலைப் புலிகள்; உலகை வியக்கவைத்த்த பெருந்தலைவன்!
உலகத் தமிழர்களின் தலைநிமிர்வாகவும் முகவரியாகவும் அமைந்த ஒப்பற்ற பெருந்தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தமிழீழ விடுதலைக்கான பயணத்தின் முக்கிய மைல் கல்லாக அமைந்த நாள் 05 மே 1976 ஆகும்.
ஆம் புதிய தமிழ் புலிகள் என்ற புரட்சிகர அமைப்பை தமிழினத்தின் விடுதலைக்கான பெரும்படையாக மாற்றியமைக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயர் மாற்றத்தோடு புதிய வரலாற்றின் தொடக்கமே இந்நாளாகும்.
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 மே மாதம் 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது.
இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார்.
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.
தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார்.
தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின்போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள்.
உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள்.
அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ்தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர்.
இராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்னும் பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர்.
குறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது.
போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள்.
ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்றுறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:
01 - இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்)
01- இம்ரான் பாண்டியன் படையணி
02- ஜெயந்தன் படையணி
03- சார்ள்ஸ் அந்தோனி சிறப்புப் படையணி
04- கிட்டு பீரங்கிப் படையணி
05- ராதா வான்காப்புப் படையணி
06- குட்டிஸ்ரீ மோட்டார் படையணி
07- சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி
08- விக்டர் கவச எதிர்ப்புப் படையணி
09- சோதியா படையணி
10- மாலதி படையணி
11- அன்பரசி படையணி
12- ஈருடப் படையணி
13- குறிபார்த்து சுடும் படையணி
14- சிறுத்தைப் படையணி
15- எல்லைப்படை
16- துணைப்படை
17- பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு
18- ஆயுதக் களஞ்சிய சேர்க்கை
19- பாதுகாத்தல் பிரிவு
02 - கடற்புலிகள்
01- நீரடி நீச்சல் பிரிவு
02- கடல் வேவு அணி
03- சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி
04- அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்)
05- நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி (ஆண்கள்)
06- கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி
03 - வான்படை
04 - கரும்புலிகள்
05 - அரசியற்துறை
01- அரசியல்துறை
02- பரப்புரைப் பிரிவு
06 - புலனாய்வுத்துறை
07 - வேவுப்பிரிவு
08 - ஒளிப்பதிவுப் பிரிவு
09 - மருத்துவப் பிரிவு
லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு
10 - கணணிப் பிரிவு
11 - மாணவர் அமைப்பு
12 - தமிழீழ வைப்பகம்
13 - தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
14 - அனைத்துலகச் செயலகம்
15 - சுங்கவரித் துறை
16 - தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
17 - தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி
18 - அரசறிவியற் கல்லூரி
19 - தமிழீழக் காவற்துறை காவல்துறை
01 - குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை
02- குற்ற புலனாய்வுப் பிரிவு
20 - வன வளத்துறை
21 - தமிழீழ நிதித்துறை
22 - விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
23 - தமிழீழ நீதித்துறை
01- தமிழீழ சட்டக்கல்லூரி
02- நீதிமன்றுகள்
24 - தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை
25 - காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
26 - செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)
27 - செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
28 - வெற்றிமனை (வலுவிழந்தோர்)
29 - அன்பு இல்லம் (முதியோர்)
30 - பொத்தகசாலை
31 - விடுதலைப் புலிகள் செய்தி இதழ்
32 - ஈழநாதம் செய்தி இதழ்
33 - வெளிச்சம் செய்தி இதழ்
34 - ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை
35 - தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
36 - நிதர்சனம்
37 - புலிகளின் குரல் வானொலி
38 - மாவீரர் பணிமனை
39 - நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான)
40 - மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
41 - சேரன் வாணிபம்
42 - சேரன் சுவையகம்
43 - பாண்டியன் உற்பத்திப் பிரிவு
44 - பாண்டியன் வாணிபம்
45 - பாண்டியன் சுவையூற்று
46 - சோழன் தயாரிப்புகள்
47 - வழங்கற் பிரிவு
48 - சூழல் நல்லாட்சி ஆணையகம்
49 - நிர்வாக சேவை
50 - ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு
51 - மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு
52 - திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு
53 - பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்
54 - தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை
55 - தமிழீழ விளையாட்டுத்துறை
56 - தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
Leave A Comment