சதுரகிரிக்கு செல்ல நாளைமுதல் 4 நாட்களுக்கு அனுமதி!
சித்திரை மாத அமாவாசை, பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரிக்கு நாளை (5-ந்தேதி) முதல் 8-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
நாளை சித்திரை மாத பிரதோஷம் என்பதால் மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் பிரதோஷத்தை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், பழம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
பிரதோஷம் மற்றும் அமாவாசை உள்ளிட்ட நாட்களுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது. பாலித்தீன் பை, பீடி சிகரெட், மது மற்றும் போதைப்பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவக் குழுவினர் இந்த 4 நாட்களும் தாணிப்பாறை வனத்துறை கேட்பகுதியில் இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
Leave A Comment