பேருந்து விபத்தில் 20 பயணிகள் பலி: பாகிஸ்தானில் பயங்கரம்
பாகிஸ்தானில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடமேற்கு பாகிஸ்தானில் காரகோரம் நெடுஞ்சாலையில், டியாமெர் மாவட்டத்தில், கில்ஜிட் பால்டிஸ்டான் மாகாணத்தில் மலைமீது சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பேருந்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதுவரை 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும், 15 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave A Comment