• Login / Register
  • செய்திகள்

    திடீர் வெள்ளம்; பள்ளி சிறுவர்கள் உள்ளிட்ட 18 பேர் பலி - ஓமானில் துயரம்!

    ஓமன் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (14) முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பள்ளி சிறுவர்கள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காணாமல் போன இருவரை மீட்புக் குழுக்கள் இன்னும் தேடி வருவதாக அவசரகால மேலாண்மைக்கான தேசியக் குழு தெரிவித்துள்ளது.

    ஓமனின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றைத் தொடர்ந்து வெள்ளம் பதிவாகியுள்ளது.

    பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் சிக்கி பல வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளன. இதன்போது ஒன்பது பள்ளி மாணவர்களும் மூன்று பெரியவர்களும் பயணித்த வாகனங்கள் ஓடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் அவர்கள் அனைவரும் பரிதாபமாக தங்கள் உயிர்களை இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் வடகிழக்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர்.

    ஓமான் அரச ஊடகம் செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் இதுவரை குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சீரற்ற வானிலை காரணமாக மஸ்கட் உட்பட ஆறு பிராந்தியங்களில் உள்ள பள்ளிகளை மூடுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    ஓமானில் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (UNOCHA) திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அண்டை நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் பிற அண்டை நாடுகளிலும் துபாயில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஓமானில் கடந்த பெப்ரவரி மாதம் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் மூன்று குழந்தைகளின் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment