இந்த மாதம் எப்படி இருக்கு? மே மாத ராசிபலன்கள்!
பிறந்துள்ள மே மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில், மேஷம் - கடகம் வரையான முதல் நான்கு ராசியினருக்கும் மே மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படும். சேமிப்புகள் அதிகரிக்கும். கனவுகள் நினைவாகும். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு திடீர் பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் கை சேரும். சொத்துக்கள் வாங்குவதற்குரிய யோகம் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை திறமையை நிரூபிக்கும் மாதமாக இந்த மாதம் திகழும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். இதனால் தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் மாதமாக திகழப்போகிறது. எதிர்பாராத மாற்றங்களை சந்திக்க கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கும். எந்த செயலை செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து அறிவுபூர்வமாக செயலாற்ற வேண்டும். பொருளாதாரத்தை பொருத்தவரை நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கவனம் தேவை. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியை தள்ளி வைப்பது நல்லது. புதிய தொழிலை தொடங்குவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக திகழப் போகிறது. எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறுவீர்கள். இருப்பினும் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்பை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. புதிதாக எந்த தொழிலிலும் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டகரமான மாதமாக திகழப்போகிறது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட வருமானம் அதிக அளவில் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
வேலையை பொருத்தவரை உடன் பணி புரிபவர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். முந்தைய காலங்களில் செய்த முயற்சிகளுக்கு இந்த மாதம் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
Leave A Comment