• Login / Register
  • மேலும்

    பித்தத்தை கட்டுப்படுத்தும் ரோஜா பூ: பித்தத்தை கட்டுப்படுத்த சில இயற்கை முறைகள்...!

    உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநிலையாக இருக்கும்போது உடலில் எந்த விளைவுகளும் ஏற்படுவதில்லை. 

    ஆனால் இந்த மூன்றின் சமநிலை கெடும்போது உடலில் நிறைய பிரச்சினைகள் உருவாகின்றன. அதில் மிக முக்கியமானது உடலின் பித்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது. 

    இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் பற்றி பார்க்கலாம்.

    • பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

    • அகத்திக்கீரையில் உள்ள கசப்பு மற்றும் துவர்ப்புத் தன்மை பித்தத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. வாரத்தில் இரண்டு நாட்கள் அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் பித்தம் தணியும். உடல் குளிர்ச்சியடையும்.

    • ரோஜாப்பூவில் பித்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் உண்டு. ரோஜாப்பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த கஷாயத்தை பாலும் கற்கண்டும் சேர்த்து குடித்து வர, தலைக்கேறிய பித்தமும் குறைந்துவிடும்.

    • எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

    • இஞ்சித் துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

    • இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

    • எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

    • பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

    • விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

    • பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

    • கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

    • நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

    • அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.


    Leave A Comment