• Login / Register
  • சினிமா

    'தளபதி-69' கடைசி படம்; இயக்குநருக்கு கண்டிஷன் போட்ட விஜய்!

    நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் 'தளபதி-69' படமே கடைசி படமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த திரைப்படம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய்யின் அரசியல் பிரவேசம் தொடர்பில் கடந்த பல வருடங்களாகவே பேசப்பட்டு வருந்தது.

    அதனை நிரூபிக்கும் வகையில் அவரது திரைப்பட காட்சி அமைப்புகளும் வசனங்களும் அமைந்து வந்துள்ளதுடன் அவரது பேச்சிலும் அரசியல் நெடி சற்று தூக்கலாகவே காணப்பட்டுவந்தது.

    இந்நிலையில், அண்மையில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் அறிவித்திருந்தார். நீண்டகாலமாகவே அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    விஜயின் அரசியல் பிரவேசம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் ஏற்கனவே ஒத்துக்கொண்ட படங்களை நடித்துக் கொடுத்துவிட்டு முழுநேர அரசியலுக்கு திரும்ப உள்ளதான அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    இந்நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது 'GOAT' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்தப் படம் செப்டம்பர் 5 அன்று வெளியாக இருப்பதால் படத்தின் புரோமோஷன் பணிகளும் இப்போதே தொடங்கியுள்ளது.

    இந்தப் படத்தை அடுத்து விஜய் தனது 69வது நடிப்பார். இந்தப் படம்தான் அவரது கடைசிப் படம் என சொல்லப்படுகிறது.

    இதற்கடுத்து அவர் சினிமாவை விட்டு விலகி தான் ஆரம்பித்த ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி மூலமாக முழு நேரமாக அரசியல் பணியில் இறங்க இருக்கிறார்.

    அவரது ‘தளபதி 69’ படத்தை இயக்குவது வெற்றிமாறன், அட்லி, கார்த்திக் சுப்பாராஜ் எனப் பல இயக்குநர்களது பெயர்கள் அடிபட, இறுதியில் ஹெச்.வினோத் பெயர் உறுதியானது.

    'தளபதி 69’ படத்திற்கான திரைக்கதையை உருவாக்குவதில் வினோத் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அரசியல் சார்ந்த கதையாகவே இது இருக்கும் என சொல்லப்படுகிறது.

    விஜயின் பிறந்தநாள் வரும் ஜூன் மாதத்தில் இந்தப் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம். இதற்கடுத்து ஆகஸ்ட் மாதமே ‘தளபதி 69’ படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

    இந்த வருட இறுதிக்குள் இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்த வருடம் புத்தாண்டுக்கு படத்தை வெளியிட வேண்டும் என வினோத்திடம் விஜய் ஸ்ட்ரிக்டாக சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒரு பக்கம் 'தளபதி 69’ அப்டேட் காரணமாக ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாலும், இன்னொரு பக்கம் அவர் இந்தப் படத்தோடு சினிமாவை விட்டு விலகுவதால் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

    Leave A Comment