சடுதியாக குறைவடைந்த தங்கத்தின் விலை!
தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்றம் இறங்களைக் கண்டு வரும் நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிரடியாக குறைந்துள்ளது.
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று(29.04.24) ஒரு சவரன் தங்கம் விலை ரூ.240 குறைந்து ரூ.53,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.6,740 ஆகவும் உள்ளது.
அதேபோன்று வெள்ளி விலை கடந்த மூன்று நாள்களாக அதே விலையில் நீடிக்கின்றது. ஒரு கிராம் ரூ.87.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.87.500-க்கும் விற்பனையாகிறது.
Leave A Comment