மீனத்தில் சூரியன், ராகு; பங்குனி மாதத்தில் பண மழையில் நனையப்போகும் ராசியினர்?
மீன ராசியில் சூரியன், ராகு சேர்ந்து பயணிக்கும் பங்குனி மாதத்தில் சில ராசியினருக்கு பண மழையில் நனையும் யோகம் கிட்டப்போகிறது.
ஒரு ராசியில் இரண்டு கிரகங்கள் ஒன்றாக பயணிக்கும் போது சில ராசியினருக்கு யோக பலன்களை வழங்குவதாக இருக்கும்.
இந்த மார்ச் மாத்தில் இரண்டு கிரகங்கள் மீன ராசியில் சேர்ந்து பயணிக்கும் அமைப்பு ஏற்பட்டுள்ளது.
கிரகங்களில் சில தங்களுடைய இடத்தை மாற்றிக் கொள்ள அதிக கால இடைவெளி எடுத்துக் கொள்ளும். சில கிரகங்கள் குறுகிய கால இடைவெளியில் தங்களுடைய இருப்பை மாற்றிக் கொள்ளும்.
அந்த வகையில் சூரிய கிரகமானது மாதத்திற்கு ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும்.
அந்த வகையில் இந்த பங்குனி மாதத்தில் சூரிய கிரகமானது மீன ராசியில் பிரவேசிக்க உள்ளது. இந்த ராசியில் இதற்கு முன் ராகு பகவான் பிரவேசித்து கொண்டிருக்கிறார்.
இதன் மூலம் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெற போகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் இதுவரையில் பெறாத அதிர்ஷ்டங்கள் எல்லாம் இந்த மாதத்தில் கிடைக்கப் போகிறது.
அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மீன ராசியில் இணையும் சூரிய ராகு செயற்கையினால் அதிர்ஷ்டத்தை பெறக் கூடிய ஐந்து ராசிக்காரர்கள்.
ரிஷபம், மிதுனம், துலாம், விருச்சகம், மகரம் இந்த ஐந்து ராசிக்காரர்களும் மிகப்பெரிய யோகங்களை பெற உள்ளார்கள்.
இது வரையில் இவர்கள் வாழ்க்கையில் சந்தித்து வந்த துன்பங்கள் அனைத்தும் நீங்க கூடிய காலக்கட்டம் இது. இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதமானது பணவரவை அதிகரித்துக் கொடுக்கும் மாதமாக அமைகிறது.
தொழில் வியாபாரம் செய்பவர்கள் பல மடங்கு லாபத்தை பெறுவார்கள். வேலை செய்பவர்கள் பணியிடத்தில் சம்பள உயர்வு பணியிடை மாற்றும் உயர்வு போன்றவை கிடைக்கக் கூடிய யோகங்கள் உண்டு. பொருளாதாரத்தில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு முன்னேற்றங்களை பெறுவார்கள்.
இந்த மாதத்தில் வரக் கூடிய வாய்ப்புகள் அனைத்தையும் இந்த ஐந்து ராசிக்காரர்கள் முறையாக பயன்படுத்திக் கொண்டால் இந்த மாதம் அல்ல இனி வரும் காலம் முழுவதும் நல்ல பொருளாதார நிலையுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ஷ்டம் என்பது எப்போதும் வருவது அல்ல வரும்போது அதை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அப்படியானால் எங்களுக்கெல்லாம் எந்த யோகமும் இல்லையா? என்று மற்ற ராசிகாரர்கள் புலம்ப வேண்டாம்.
இந்த காலக்கட்டத்தில் இவர்களுக்கான நேரம் மிக நன்றாக உள்ளது என்பது தான் இந்த பதிவின் தகவல். எப்போதும் நம்முடைய முயற்சிக்கும் உழைப்பிற்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.
இது பொதுவான பலன்களாகும். உங்கள் உங்கள் சுய ஜாதக அடிப்படையில் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ளுங்கள். ஜோதிட நம்பிக்கை உள்ளவர்கள் இதனை பின்பற்றுங்கள்.
Leave A Comment