குரோதி புத்தாண்டில் யோக பலன்கள் யாருக்கு?
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் சேர்க்கை, பெயர்ச்சி எப்படி சில மாற்றங்களை ஏற்படுத்துகிறதோ, அதே போல வருடங்களின் பிறப்பை ஒட்டியும் 12 ராசிக்காரர்களின் பலன்களையும் கணிக்கப்படுகிறது.
அந்த வகையில் பிறக்கப் போகும் குரோதி புத்தாண்டில் சில ராசிக்காரர்கள் யோக பலன்களை பெறுகிறார்கள்.
பிறக்கப் போகும் வருடமான குரோதி சற்று மோசமானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் குரோதி என்றாலே பகை, கேடு என்று தான் பொருள்.
இந்த மோசமான சூழ்நிலையிலும் சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான அதிர்ஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி:
மேஷ ராசியினருக்கு இந்த சித்திரை புத்தாண்டு பல அதிர்ஷ்டகரமான சூழ்நிலைகளை உருவாக்க உள்ளது. உங்கள் ராசியில் குரு இருப்பது நிதி ரீதியான வெற்றிகளை பெற்றுத் தரக்கூடிய யோகம் உள்ளது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பளம் உயர்வு ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை காணலாம். வேலை செய்யும் இடத்தில் நற்பெயரும் பாராட்டும் குவியும். ஆக மொத்தத்தில் இந்த வருடம் பல வெற்றிகளை குவிக்க கூடிய ஆண்டாக அமையும்.
கடக ராசி:
கடக ராசிக்காரர்களுக்கும் சித்திரை புத்தாண்டு பயனுள்ளதாக அமையப் போகிறது. உங்களின் செல்வாக்கு பல மடங்கு உயரும். தைரியமாக அனைத்திலும் செயல்படுவீர்கள்.
புதிய ஒப்பந்தங்கள் புதிய வேலைகள் தேடி வரும். வேலையை மாற்ற முயற்சி செய்பவர்கள் நல்ல பலனை பெறுவார்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும் இருப்பினும் உங்கள் ராசியில் அஸ்டம சனி இருப்பதால் எந்த ஒரு முடிவையும் சற்று நிதானமாக யோசித்து எடுங்கள்.
சிம்ம ராசி:
சிம்ம ராசியினருக்கு இந்த சித்திரை புத்தாண்டு மங்களகரமானதும் சுப பலன்களை தருவதாகவும் அமைய உள்ளது. இந்த ஆண்டில் உங்களின் தந்தை வழி முன்னோர் சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வெளியூர் வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதே போல் குழந்தை பாக்கியம், திருமணத்திற்காக காத்திருப்பவர்களும் அதற்கான யோகத்தையும் பெறலாம். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
தனுசு:
தனுசு ராசி தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரோதி புத்தாண்டு பல அதிர்ஷ்டங்களை தரக்கூடியதாக உள்ளது. உங்களின் செயல்பாடுகளால் அனைத்து இடத்திலும் நற்பெயரும் வெற்றிகளையும் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
திருமண முயற்சி, குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்காக காத்திருப்பவர்களுக்கு அதற்கான அனுகூலம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் காற்று உங்கள் பக்கம் வீசுவதால் நீங்கள் தொடங்கும் எந்த செயலும் நிச்சயம் வெற்றிகரமாக முடியும். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசி சனி பகவானை அதிபதியாகக் கொண்ட சனியின் ஆட்சி உச்சத்தில் இருக்கக் கூடிய கும்ப ராசிக்காரர்களுக்கு தற்போதைய குரோதி புத்தாண்டு பலன் நல்ல பலன்களை தருவதாகவே அமைந்துள்ளது.
சித்திரை புத்தாண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி சார்ந்த விஷயத்தில் லாபங்களும் வாய்ப்புகளும் அதிகரிக்கும். முதலீடு செய்தவற்றிலிருந்து லாபங்கள் வர ஆரம்பிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலமும் லாபத்தை பெறுவீர்கள். உங்களின் முயற்சிகள் கை கூடும். நல்ல முன்னேற்றமான சூழ்நிலை காணக் கூடிய காலம் இது.
மேற்குறித்த பலன்கள் பொதுவான கணிப்பாகும். உங்கள் உங்கள் சுய ஜாதகத்தின் அடிப்படையில் பிறக்கின்ற சித்திரை புத்தாண்டு உங்களுக்கு எவ்வாறான நற்பலன்களை வழங்கப்போகின்றது என்பதனை அறிந்து கொள்ளுங்கள். இந்த ஜோதிட பதிவில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றுங்கள்.
Leave A Comment