மகா சிவராத்திரி முதல் ஐந்து ராசிக்காரர்களுக்கு யோகம்!
இந்த ஆண்டு (2023) மகா சிவராத்திரி முதல் ஐந்து ராசிக்காரர்களுக்கு யோகமான பலன்கள் கிடைக்க உள்ளது.
மகா சிவராத்திரிக்கு முன், இரண்டு முக்கிய கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மகாசிவராத்திரிக்கு முன், இந்த கிரகங்களின் இயக்கம் ஐந்து ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அள்ளித்தரும்.
இவ்வாண்டு சிவராத்திரி விழா நேற்று (பிப்ரவரி 18ம் தேதி) ஆரம்பமாகியது. உலகெங்கும் வாழும் சிவ பக்தர்கள் சிவராத்திரி விரதமிருந்து பக்திபூர்வமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த முறை மகாசிவராத்திரியில் ஒரு அற்புதமான ஜோதிட நிகழ்வு நடக்கிறது. சிவபெருமானின் இந்த பெரிய திருவிழாவிற்கு முன், இரண்டு பெரிய கிரகங்களின் இயக்கம் மாறிவிட்டது. முதலில், பிப்ரவரி 13 அன்று, கிரகங்களின் அரசனான சூரியன் கும்ப ராசிக்கு நுழைந்தார். பின்னர் பிப்ரவரி 15 அன்று, சுக்கிரன் மீனத்திற்குச் சென்றார்.
இத்தகைய சூழ்நிலையில், மகாசிவராத்திரிக்கு முன், இந்த இரண்டு முக்கிய கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மகாசிவராத்திரிக்கு முன், இந்த கிரகங்களின் இயக்கம் ஐந்து ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அள்ளித்தரும்.
மிதுனம்:
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, மகாசிவராத்திரி முதல், மிதுன ராசிக்காரர்கள் அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இவர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக நன்மைகள் ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் பணி பாராட்டப்படும். மறுபுறம், தைரியமும் துணிச்சலும் அதிகரிப்பால், மரியாதை அதிகரிக்கும்.
குடும்ப வாழ்க்கை, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரணமான ஆதரவை பெறுவீர்கள். மொத்தத்தில் சிவபெருமானின் அருளால் மிதுன ராசிக்காரர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள்.
சிம்மம்:
சிவராத்திரியால் அதிகப்படியான அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் இரண்டாவது அதிர்ச்ஷ்ட ராசிக்காரர்கள் சிம்ம ராசிக்காரர்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றியடையும். மறுபுறம், வேலையில் ஏதேனும் காரணத்தால் சிரமப்பட்டவர்களுக்கு, நல்ல செய்தி கிடைக்கும்.
அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு மார்ச் 31 க்கு முன் நடக்கும் அப்ரெய்சல் மிக நன்றாக அமையும். அதாவது, புதிய நிதியாண்டில் உங்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய அதிகரிப்புக்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
கன்னி:
இந்த மஹாசிவராத்திரி 12 ராசிக்காரர்களுக்கும் அவர்களின் நற்பலன்களுக்கு ஏற்ப சிவபெருமானின் அருள் கிடைக்கும். எனினும், இந்த சிவராத்திரி கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. தொழில், வியாபாரம் சம்பந்தமான அனுகூலங்கள் உண்டாகும். செல்வச் செழிப்பு அதிகரிப்பதோடு, பணம் மற்றும் பணப் பரிவர்த்தனைகளிலும் நன்மைகள் ஏற்படும்.
வாகனம், சொத்து வாங்கும் எண்ணம் இருந்தால், இப்போது முதலீடு செய்ய சாதகமான நேரம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் நீண்ட கால பலனைத் தரும். திருமண வாழ்க்கையிலும் இனிமை இருக்கும்.
தனுசு:
மகாசிவராத்திரியில் இருந்து தனுசு ராசிக்காரர்களின் நல்ல நாட்கள் தொடங்கும். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பதன் மூலம், பண வரவை நீங்கள் உறுதிப்படுத்தலாம். சிறிதளவு சாமர்த்தியமாக நடந்துகொண்டால், உங்கள் மீது பண மழை பொழியும். அதாவது பண பரிவர்த்தனைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இப்போது கிடைக்கும். முதலீடு செய்வதற்கும் இது மிக நல்ல நேரம். வருமான ஆதாரங்கள் அதிகரிப்பதைக் காணலாம். சமூகத்தில் கௌரவமும் பதவியும் உயரும்.
கும்பம்:
மகாசிவராத்திரி பண்டிகை கும்ப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். மகாசிவராத்திரி முதல் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். கும்ப ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபம் கிடைக்கும். பணம் சேமிக்கப்படும். செலவுகளில் கட்டுப்பாடு அதிகரிக்கும். நல்ல வேலை வாய்ப்புகளையும் பெறலாம்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் / மனைவி குழந்தைகளுடன் ஆனந்தமான பொழுதை செலவழிப்பீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் யோகமும் உள்ளது.
Leave A Comment