• Login / Register
  • செய்திகள்

    தைவானில் இன்று நிலநடுக்கம்!

    இன்று பிற்பகல் 03.51 மணி அளவில் ரிக்டா் அளவுகோலில் 4.0 அலகுகளாகப் பதிவானது என்று மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்தது.

    டைடுங் கவுண்டி ஹாலிலிருந்து தெற்கு-தென்மேற்கே 10.2 கி.மீ தொலைவில் அதன் மையப்பகுதி 26.8 கி.மீ ஆழத்தில் இருந்ததாக மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்தது. 

    இந்த நிலையில் ரிக்டரில் அளவில் 6.1 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் தைவானை உலுக்கியது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 87 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. எனினும், 

    இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.



    Leave A Comment