உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறதா?: எப்படி கண்டுபிடிப்பது
இந்தியாவில் தொடர்ந்து வாட்ஸ்ஆப் கணக்குகள் வாட்ஸ்ஆப் செயலியால் நீக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவில் சுமார் 2 கோடி கணக்குகளை வாட்ஸ்ஆப் செயலி நீக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, இதேக்காலக்கட்டத்தில் நீக்கப்பட்ட வாட்ஸ்ஆப் கணக்குகளின் எண்ணிக்கையை விட இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தகவல் தொழில்துட்பத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையில், பயனர்களின் பாதுகாப்பு மற்றும் செயலியின் நம்பகத்தன்மை, தரத்தை மேம்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதாவது, அதாவது, கடந்த ஜனவரி மாதத்தில் மடடும் கிட்டத்தட்ட 67 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. பிப்ரவரி மாதம் 76 லட்சமும், மார்ச் மாதத்தில் 79 லட்சம் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், 2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 2,23,10,000 வாட்ஸ்ஆப் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவ்வாறு கணக்குகள் முடக்கப்படுவது குறித்து வாட்ஸ்ஆப் தனது இணையதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ஒருவேளை உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கு முடக்கப்பட்டிருந்தால், நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியை திறந்ததும், அதில், உங்கள் கணக்கில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த அனுமதியில்லை என்ற தகவல் வரும். எங்களது விதிமுறைகளுக்கு மாறாக ஒரு வாட்ஸ்ஆப் கணக்கு செயல்பட்டால் அதனை நாங்கள் நீக்கிவிடுவோம். அதாவது ஸ்பேம், ஸ்கேம் போன்றவற்றில் ஈடுபடும் வாட்ஸ்ஆப் கணக்குகள் மூலம் பிற பயனர்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave A Comment