கும்பத்தில் சனி உதயம்; வெளிநாட்டு யோகம் யாருக்கு?
30 ஆண்டுகளுக்கு பின்னர் தனது சொந்த வீடான கும்பத்தில் சஞ்சாரம் செய்து வரும் சனி பகவான் உதயமாகியுள்ள நிலையில் சில ராசியினருக்கு யோகமான பலன்கள் கிட்ட உள்ளது.
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். ஒருவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதி பலன்களை இரட்டிப்பாக திருப்பித் தருவதில் சனிக்கு நிகர் யாரும் இல்லை. ஆகையாலே சனி பகவானை கண்டால் அனைவருக்கும் ஒரு வித அச்ச உணர்வு ஏற்படும்.
அப்படியான சனி பகவானின் உதயத்தால் சில ராசிகள் நன்மை பெறுகிறார்கள்.
சனிபகவானை பொறுத்த வரையில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். கிரகங்களிலே மெதுவாக நகரக் கூடியவர் இவர் தான்.
அப்படியான சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் தான் பயணிப்பார்.
அந்த வகையில் கடந்த பிப்ரவரியில் கும்ப ராசியில் அஸ்தமனமான சனிபகவான் நேற்று முன்தினம் (மார்ச்-18) அதே ராசியில் உதயமாகியுள்ளார்.
சனி பகவானின் இந்த உதயத்தால் அனைத்து ராசிகளும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் மட்டும் நல்ல பலன்களை பெறுகிறார்கள்.
கும்பத்தில் உதயமாகியுள்ள சனி பகவானால் யோக பலன்களை பெறப்போகும் ராசிகள்..
மேஷம்
மேஷ ராசி சனிபகவானால் உங்களுக்கு அதிக அளவில் நன்மை விளையப் போகிறது. வீண் அலைச்சல்கள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசி ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் எல்லா இடங்களிலும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கடின உழைப்பை மேற் கொண்டால் நிச்சயம் நல்ல பலனை பெறலாம். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு அதில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசி சனி பகவானால் திடீரென சுப பலன்களை பெறக் கூடிய ராசிக்காரர்கள் இவர்கள் தான். இதுவரையில் நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடியும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு தான் இருக்கிறது என்றே சொல்லலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். இது வரை நினைத்த காரியங்களும் கை கூடும். பெற்றோரின் உடல்நலத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்
சிம்ம ராசி சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளின் ஆதரவும் பணி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். புதிய முதலீடுகள் லாபத்தை பெருக்கி தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உருவாகும். வாழ்க்கை துணையின் ஆதரவு முழுவதுமாக இருக்கும் பொருளாதார நிலைமை சீராகும்.
இது பொதுவான பலன்களாகும். உங்கள் உங்கள் சுய ஜாதக அடிப்படையில் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ளுங்கள். ஜோதிட நம்பிக்கை உள்ளவர்கள் இதனை பின்பற்றுங்கள்.
Leave A Comment