• Login / Register
  • செய்திகள்

    மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை; மின்சாரம் தாக்கி தம்பதியர் பரிதாப மரணம்!

    மதுரையில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அடுத்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    கனமழையுடன் பலத்த காற்று வீசியதை அடுத்து அறுந்து விழுந்து விதியில் தொங்கிய நிலையில் காணப்பட்ட  மின்சார வயர் உரசியதனாலேயே குறித்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    மதுரை டி.வி.எஸ். நகர் துரைசாமி சாலையில் வசித்து வந்த முருகேசன் - பாப்பாத்தி தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

    குறித்த தம்பதியினர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தனர். நேற்றிரவு பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கடையை பூட்டிவிட்டு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.

    பலத்த காற்று வீசிய போது அப்பகுதியில் மின்சார வயர் அறுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அறியாத அவர்கள், இருட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

    அப்போது சாலையின் நடுவே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த மின்வயர் பட்டு மின்சாரம் பாய்ந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கீழே விழுந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இருவரது உடல்களையும் மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Leave A Comment