• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த வாரம் எப்படி..? துலாம் - மீனம் ராசிகளுக்கான பலன்கள்!

    06/05/2024 முதல் 12/05/2024 வரையான இந்த வாரத்திற்கான துலாம் - மீனம் ராசிகளுக்கான ராசிபலன்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் நிறைந்த வாரமாக திகழப்போகிறது .பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்தை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப விஷயத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.

    வேலையை பொருத்தவரை புதிய வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு மன அழுத்தத்தால் வேலை பாதிக்கும் சூழ்நிலை உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பாராத பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு பொருள் சேர்க்கை ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் ஏற்படும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வெங்கடேச பெருமாளை வழிபட வேண்டும்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவதற்கு சிறிது காலதாமதம் ஆகும். ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. ஒரு சிலரது இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழிலை விரிவு படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பாளை வழிபட வேண்டும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரம் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு திடீர் பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். ஒரு சிலருக்கு பழைய கடன்களை அடைப்பதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும்.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் முக்கிய முடிவுகள் எதையும் இந்த வாரத்தில் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு கால பைரவரை வழிபட வேண்டும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படுவது குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின் அனுசரனையால் சிறப்பாக வேலையை செய்து முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக அமையும்.

    வேலையை பொருத்தவரை புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை முன்னேற்றவும் விரிவு படுத்தவும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

    Leave A Comment