ஒரே பார்வையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் - தொடரும் மாணவிகளின் ஆதிகம்!
தமிழ்நாட்டில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு (SSLC) முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ள நிலையில் வழமைபொன்று இம்முறையும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
இதற்காக, மாநிலம் முழுவதும் 4107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட சூழலில், ஏப்ரல் 12- ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றன.
இதனையடுத்து திட்டமிட்டபடி இன்று (10.05.2024) காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தேர்ச்சி வீதத்தில் தொடரும் மாணவிகளின் ஆதிக்கம்
அந்த வகையில், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.55% ஆக உள்ளது. வழக்கம் போலவே மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 94.53% ஆகவும் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 88.58% உள்ளது. மாணவர்களை விட 5.95% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
97.31% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம்
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
97.02% தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடமும், 96.36% தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.
குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் 86.10%,
ராணிப்பேட்டை 85.48%,
வேலூர் 82.07% தேர்ச்சி பெற்று கடைசி 3 இடங்களை பிடித்துள்ளன.
1,364 அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,364 அரசுப் பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழில் 8 பேர் 100% மதிப்பெண்கள்
10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தேர்வில் 8 பேர் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர்
ஆங்கிலத்தில் 415 பேர் 100% மதிப்பெண்கள்
10ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 415 பேர் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர்
கணிதத்தில் 20,691 பேர் 100% மதிப்பெண்கள்
10ஆம் வகுப்பு கணித பாடத்தில் 20,691 பேர் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர்
அரசுப் பள்ளிகள் 87.90% தேர்ச்சி
அரசுப் பள்ளிகள் 87.90%, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 91.77% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தனியார் பள்ளிகள் 91.43% தேர்ச்சி
தனியார் பள்ளிகள் 91.43%, இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 91.93% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பெண்கள் பள்ளிகள் 93.80%, ஆண்கள் பள்ளிகள் 83.17% தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பாடவாரியாக தேர்ச்சி விகிதம்
தமிழ் மற்றும் இதர மொழிப்பாடத்தில் 96.85%,
ஆங்கிலம் 99.15%,
கணிதம் 96.78%,
அறிவியல் 96.72%,
சமூக அறிவியல் பாடத்தில் 95.74% தேர்ச்சி
அறிவியல் பாடத்தில் 5,104 மாணவர்கள் 100% மதிப்பெண்கள்
அறிவியல் பாடத்தில் 5,104 மாணவர்கள்,
சமூக அறிவியல் பாடத்தில் 4,423 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் 12,491 பேர் தேர்ச்சி
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 13,510 மாற்றுத்திறனாளி மாணாக்கர்களில் 12,491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிறைவாசிகளில் 228 பேர் தேர்ச்சி
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 260 சிறைவாசிகளில் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரியில் 91.55% பேர் தேர்ச்சி
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரியில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காரைக்காலில் 78.20%, புதுச்சேரியில் 91.28% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவ, மாணவிகள் ஏற்கெனவே தேர்வுத்துறைக்கு தெரிவித்திருந்த செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டன. இதுதவிர, அரசுத் தேர்வு இயக்ககத்தின் இணைய தளங்களான www.results.nic.in, www.dge.tn.gov.in ஆகியவற்றின் மூலமும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மறுகூட்டல் - மே 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
10ஆம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு மே 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
துணைத்தேர்வு அட்டவணை - நாளை வெளியீடு
10ஆம் வகுப்பில் தேர்ச்சிபெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான அட்டவணை நாளை வெளியிடப்படுகிறது. துணைத்தேர்வு ஜூலை 2ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave A Comment