• Login / Register
  • கட்டுரைகள்

    மீண்டும் தீவிரமாக பரவும் தட்டம்மை?!

    குழந்தைகளை எளிதில் தாக்கும் தட்டம்மை, அமெரிக்காவில் வேகமாக பரவி வருவதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

    தற்காத்து கொள்ள முடிகிற நோய்களில் ஒன்றான தட்டம்மை உலகளவில் பார்க்கும்போது அதிகம் தொற்றும்தன்மை கொண்டது.

    முப்பது ஆண்டுகளில் இல்லாதளவுக்கு 2019-ல் அமெரிக்காவில் பெரியளவில் ஏற்பட்டது.

    அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் முன்தடுப்பு மையம் (சிடிசி) வெளியிட்ட குறிப்பில் ஏப்ரல் 5 வரை 113 பேர் பாதிக்கப்படுள்ளதாக தெரிவித்துள்ளது. 7 பகுதிகளில் இந்த தொற்றுப் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடும்போது வருடத்தின் தொடக்க மாதங்களில் இந்தளவு அதிகமாக தொற்று ஏற்பட்டிருப்பது அபாயமானது என்கிறார்கள் நோய்த் தடுப்பு வல்லுநர்கள். 17 மடங்கு அதிகம் என்பதே பதைபதைப்புக் காரணம்.

    தட்டம்மை உள்ளவர்கள் தும்மினாலோ இருமினாலோ அவர்களிடமிருந்து நோய்த் தொற்று மற்றவர்களுக்கு பரவும். காற்றில் 2 மணி நேரம் வரை நோய்க்கிருமிகள் அழியாமல் இருக்கும். 10-ல் 9 பேர் இந்த நோயினால் பாதிக்கக் கூடியவர்களாக உள்ளதாக சிடிசி தெரிவிக்கிறது.

    எம்எம்ஆர் தடுப்பூசி இதற்கு தகுந்த நிவாரணமாக இருக்குமெனவும் இரண்டு தவணைகளாக செலுத்தப்படும் தடுப்பூசி 95 சதவீதம் காக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    கவனிக்க வேண்டிய அறிகுறிகள்:

    நோயாளியின் தும்மல் மற்றும் இரும்பல் மூலம் காற்றில் இந்த வைரஸ் தொற்று எளிதில் பரவுகிறது. குழந்தைகளுக்கு தட்டம்மை எளிதில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்பதால் குறிப்பிட்ட ஆரம்ப அறிகுறிகளை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். பொதுவாக தட்டம்மை நோயின் ஆரம்ப அறிகுறிகள் நோய்வாய்ப்பட்ட பிறகு, 7-14 நாட்களுக்குள் தோன்றும். 

    மிகவும் பொதுவான அறிகுறிகளில் மூக்கு ஒழுகுவது (ரன்னி நோஸ்), வறட்டு இருமல், பிங்க் ஐ எனப்படும் கான்ஜுன்க்டிவிடிஸ் (அரிப்புடன் கண் சிவத்தல்), காய்ச்சல் உள்ளிட்டவை அடங்கும். தட்டம்மை நோயுடன் தொடர்புடைய உடல் முழுவதும் தோன்ற கூடிய ரேஷஸ் முதல் அறிகுறிகள் வெளிப்பட்டதில் இருந்து 3 - 5 நாட்களுக்கு பின் தோன்றும்.

     தட்டம்மையை பொறுத்த வரை அபாயத்திலிருந்து பாதுகாக்க MMR (measles, mumps, rubella) மற்றும் MMRV (measles, mumps, rubella, varicella) தடுப்பூசிகள் உள்ளன. பொதுவாக MMR தடுப்பூசி 2 டோஸ்களில் குழந்தைகளுக்கு போடப்படுகிறது. முதல் டோஸ் 12 - 15 மாதங்களுக்குள் மற்றும் இரண்டாவது டோஸ் 4 - 5 வயது வரை போடப்படுகிறது. 

    MMRV தடுப்பூசி 2 மாதங்கள் முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. எனினும் பொதுவாக முதல் டோஸ் 12 மாதங்கள் - 15 மாதங்களுக்குள் மற்றும் இரண்டாவது டோஸ் 4 முதல் 6 வயதில் குழந்தைகளுக்கு போடப்பட்டு வருகிறது.





    Leave A Comment