• Login / Register
  • சினிமா

    இன்ஸ்டாவில் இருந்து வெளியேறிய யுவன்: காரணம் இதுவா?

    இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் கணக்கினை டீ ஆக்டிவேட் செய்துள்ளார். 

    விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    சமீபத்தில் முதல் பாடல் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஒரே நாளில் அதிக லைக், பார்வைகளை கடந்து சாதனைப் படைத்தது. 

    சுமாரான பாடலை கொடுத்ததற்காக பலரும் இணையத்தில் யுவன் ஷங்கர் ராஜாவை மீம்ஸ்கள் மூலமாக கிண்டல் செய்து வந்தனர்.

    இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் கணக்கினை டீ ஆக்டிவேட் செய்துள்ளார். இதற்கு காரணம் கோட் படத்தின் விசில் போடு பாடல்தான் என இணையத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.




    Leave A Comment