வெள்ளத்தில் தத்தளிக்கும் டுபாய் விமான நிலையம் - முடங்கிய விமான போக்குவரத்து!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக டுபாய் விமான நிலையம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதையடுத்து விமான போக்குவரத்து முடங்கியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமானில் கனமழை பெய்து வருவதனாள் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பள்ளி சிறுவர்கள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்திலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய டுப்பாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனாள் விமான ஓடுபாதை உள்ளிட்ட பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு காரணமாக பாடசாலைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
டுபாயில் பாலைவனம் நிறைந்த பகுதிகள் அதிகளவில் உள்ளன. வெப்பநிலையும் அதிகரித்து காணப்படும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், சாலைகளில் நீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது. கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Leave A Comment