சனிபகவானுக்கு பிடித்த ராசிகள்; அருள் மழையில் நனையும் அதிஸ்டம்!
நவக்கிரகங்களில் அச்சத்தை கொடுக்கும் கிரகமாக மக்களால் கருதப்படும் சனி பகாவனது மாற்றம் எல்லோராலும் உன்னிப்பாக அவதானிக்கப்படும் ஒன்றாக உள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தை பொருத்த வரையில் சனி பகவானின் மாற்றமானது ஜோதிடத்தில் மிக முக்கியமான காலக்கட்டமாக பார்க்கப்படுகிறது.
கிரகங்களில் மெதுவாக நகரக் கூடியவர் இந்த சனி பகவான். ஒருவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப நன்மை தீமைகளை பகிர்ந்து அளிப்பதில் இவருக்கு நிகர் இவர் தான். ஆகையால் சனி பகவானை கண்டால் அனைவருக்கும் ஒரு வித அச்சம் இருக்கத் தான் செய்யும் அத்தகைய சனி பகவானுக்கும் சில ராசிக்காரர்களை மிகவும் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது.
அனைத்து ராசிக்காரர்களையும் பிடித்தாலும் கூட இந்த ராசிக்காரர்களை போராட்ட காலத்திலும் கூட பொறுத்து அவர்களை காத்து ரட்சிப்பார் என்று சொல்லப்படுகிறது.
அது எந்த ராசிக்காரர்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் மீது சனிபகவானின் அருள் எப்போதும் இருக்கும். இவர்கள் நேர்மையானவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். தனக்கு கஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என நினைத்து பிறருக்கு உதவும் தயாள குணம் படைத்தவர்கள். பிறருக்கு உதவுபவர்களை சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால் மேஷ ராசிக்காரர்களை சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்கள்.
துலாம்:
சனி பகவான் அனைத்து ராசிகளையும் விட துலாம் ராசியில் அதிகம் உச்சம் பெற்றுள்ளார். ஆகையால் துலாம் ராசிக்காரர்கள் மீது சனி பகவான் அதிகப்படியான அருளை பொழிகிறார். அவர்களது வாழ்வில் வரும் அனைத்து விதமான சங்கடங்களையும் துன்பம் சனி பகவான் எளிதில் போக்கி விடுவார். சனியும் சுக்கிரனும் நல்ல நட்பு கிரகங்கள். துலாம் ராசியின் அதிபதியாக சுக்கிரன் உள்ளார். இதன் காரணமாகவும் சனி பகவான் துலா ராசிக்காரர்கள் மீது அருள்மழை பொழிகிறார்.
மகர ராசி:
இந்த ராசிக்காரர்களின் அதிபதியாகவே சனிபகவான் உள்ளார். ஆகையால் இவர்களையும் இவருக்கு மிகவும் பிடிக்கும். மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளர்களாகவும் விடா முயற்சி உடையவர்களாகவும் இருக்கிறார்கள். அதிகமாக உழைக்கும் அனைவரையும் சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால் மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவான் எப்போதும் உறுதுணையாக இருப்பார்.
கும்ப ராசி:
இந்த கும்ப ராசிக்காரர்கள் சனி பகவானுக்கு மிகவும் நெருக்கமான ராசிக்காரர்கள். சனியின் அருள் இவர்களுக்கு எப்பொழுதுமே கிடைத்துக் கொண்டிருக்கும். இவர்கள் பெரும்பாலும் நிதி நிலைமையில் வலுவானவர்களாக இருப்பார்கள்ஏழரை சனியின் தாக்கம் நேரத்தில் கூட கும்ப ராசிக்காரர்கள் சனி பகவான் அதிக அளவில் துன்பப்படுத்த மாட்டார்.
சனி பகவானின் அருளை எப்போதும் பெற வேண்டும் என்றால் ஏழை எழுதியவர்களுக்கு உங்களால் முடிந்த வரையில் உதவி செய்யுங்கள். அத்துடன் அனுமன் சாலிசா, சனி சாலிசா, சர கேளாறு பதிப்பகம் போன்றவற்றை படிக்கலாம். சனிக்கிழமைகளில் நவகிரக வழிபாடு, காக்கைக்கு எள் சாதம் வைப்பது போன்ற வற்றை தொடர்ந்து செய்யும் பொழுது சனியின் தாக்கம் குறைந்து அவரின் அருளை பெறலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களை அடிப்படையில் தொகுக்கப்பட்ட பொதுவான பலன்களாகும்.
சனிக்கு பிடித்த ராசிக்காரர்கள் என்ற பட்டியலில் இந்த ராசிகள் இருந்தாலும் அவரவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பலனை தருவதில் இவர் ஒருபோதும் தவற மாட்டார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உங்கள் உங்கள் சுய ஜாதக அடிப்படையில் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.
Leave A Comment