• Login / Register
  • மேலும்

    மோர் மட்டும் போதும்.. : மோரின் நன்மைகள் தெரியுமா?

    நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், நமது உடல் எப்போதும் நீர் சத்துடனும் குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

    இந்த கோடை காலங்களில் மோர் பிரதான ஒரு உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஏனெனில் இது நமது உடலைக் குளிர்ச்சியாகவும், நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இந்த மோர் குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் க்ரீம் போன்றவற்றில் இருந்து தயார் செய்யப்படுகிறது.

    மோரில் இஞ்சி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து குடித்தால், ருசியாகவும் நல்ல மணத்துடனும் இருக்கும். இத்தகைய மோரை அன்றாடம் ஒருமுறை குடித்தால், பல்வேறு நன்மைகள் கிடைத்து, உடல் ஃபிட்டாக இருக்கும்.

    மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்..... 

    கோடை வெப்பத்தால் உடல் வெப்பமடைகிறது. இதைத் தடுக்க, அதிக அளவு வியர்வை தேவைப்படுகிறது. மோர் இந்தப் பிரச்சனையைத் தடுத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

    மோர் செரிமானத்திற்கு நல்லது. மோரில் சேர்க்கப்படும் சீரகப் பொடி போன்ற மசாலாப் பொருட்களும் செரிமானத்திற்கு உதவுவதோடு, செரிமானத்தை எளிதாகவும் மேலும் சரியானதாகவும் ஆக்கும்.

    வயிற்றுப் போக்கால் கஷ்டப்படுபவர்கள், மோரில் இஞ்சி பொடி அல்லது நற்பதமான இஞ்சியை தட்டிப் போட்டு குடித்தால் குணமாகும். அதுவும் விரைவில் குணமாவதற்கு, ஒரு நாளைக்கு 3 முறை மோரைக் குடிக்க வேண்டும். இதனால் இரண்டே நாட்களில் வயிற்றுப்போக்கு பிரச்சனை குணமாகிவிடும்.

    மோரில் கால்சியம் தவிர பல்வேறு புரதங்கள், வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு துணைபுரிகின்றன. இதன் விளைவாக, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

    மோரில் ஆன்டி-வைரல், ஆன்டி-கேன்சர் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளது. ஆகவே மோரை தினமும் குடித்தால், இரத்த அழுத்தம் குறையும் மற்றும் இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

    அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில், மோரில் கொலஸ்ட்ராலை குறைவாக பராமரிக்க உதவும் பயனுள்ள மூலக்கூறுகள் உள்ளன. மேலும் ஆயுர்வேதத்தின் படி, ஒருவர் மோரை தினமும் குறைந்தது ஒரு முறை குடிப்பதால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும் மற்றும் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது.



    Leave A Comment