• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த மாதம் எப்படி இருக்கு..? ஏப்ரல் மாத ராசிபலன் 2024!

    தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கான மார்ச் மாதத்திற்கான ராசி பலன்கள்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கவனத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். கூடுதல் கவனம் செலுத்தி வேலையை செய்வதன் மூலம் பெரிய தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்கும். இதனால் தொழிலை நல்ல முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு திருச்செந்தூர் முருகனை வழிபட வேண்டும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சீரான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு திடீர் செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சிறிது நேரத்திலேயே ஒற்றுமையுடன் சகஜமாக பழகும் சூழ்நிலை உண்டாகும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். கடின உழைப்பின் காரணமாகவே எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வார்கள். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க சற்று கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வெங்கடாசலபதியை வழிபட வேண்டும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கோபத்தை கட்டுப்படுத்தும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் செலவுகளும் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கோபத்தை தவிர்த்து நிதானத்துடனும் பொறுமையுடனும் செயலாற்றுவது நன்மையை தரும். இல்லையெனில் பிரிவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

    வேலையை பொருத்தவரை வேலை பாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. வேலை சுமை அதிகமாகவே இருக்கும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உயர் அதிகாரிகளிடமிருந்து எந்தவித சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. முதலீடு செய்யும் பொழுது நன்றாக யோசித்து செய்வது நன்மையை தரும். இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு கால பைரவரை வழிபட வேண்டும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதற்கு இணையான செலவுகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சேமிப்புகள் கரையும் சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற மன அழுத்தத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அதை பேசி உடனுக்குடனே சரி செய்து கொள்வது நன்மையை தரும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை எளிதில் செய்து முடித்து விரும்பிய எதிர்பார்த்த பதவி உயர்வை பெறுவீர்கள். தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பதன் மூலம் பணம் வரவை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வாராக் அம்மனை வழிபட வேண்டும்.

    Leave A Comment