• Login / Register
  • மேலும்

    2 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் நீக்கம்: எக்ஸ் அதிரடி

    பிரபல சமூக வலைதளமான ’எக்ஸ்’(ட்விட்டர்) தளத்தை இந்தியாவில் மட்டும் 2.6 கோடி பேருக்கு மேல் பயன்படுத்தி வரும் நிலையில், ஒரு மாதத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் எக்ஸ் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஏப்ரல் 26 முதல் மார்ச் 25-ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் மட்டும் 2.13 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை நீக்கம் செய்துள்ளதாக எக்ஸ் தளத்தின் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டவிரோத செய்திகள் பரப்புதல், குழந்தை பாலியல் காணொலிகளை பதிவு செய்தல் உள்ளிட்ட காரணங்கள் அடிப்படையில் அதிகளவிலான கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 1,235 இந்தியர்களின் கணக்குகள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் குற்றச்சாட்டில் நீக்கம் செய்யப்பட்டு, மத்திய அரசிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து எக்ஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய பயனர்களிடம் இருந்து எக்ஸ் கணக்குகளின் மேல் 5,158 புகார்கள் பெறப்பட்டு, அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடந்த மாதத்தில் நீக்கம் செய்யப்பட்ட கணக்குகளில் 86 பேர் நீக்கத்துக்கு எதிராக எங்களிடம் முறையிட்டனர். அதில், 7 கணக்குகளின் விளக்கம் ஏற்கப்பட்டு நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    Leave A Comment