• Login / Register
  • மேலும்

    அரிதான முழு சூரிய கிரகணம் - நாசாவின் அறிவிப்பு!

    பல வருடங்களுக்கு ஒரு முறை அரிதாக நிகழும் முழு சூரிய கிரகணம் நேற்று உலகின் பல பாகங்களிலும் தென்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலும் காணக்கூடியதாக இருந்துள்ளது.

    2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நேற்று (08) திங்கட்கிழமை நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு 18 மாதங்களுக்கும், பூமியின் ஒரு பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

    அவ்வாறு நிகழும் சூரிய கிரகணமானது பகுதியளவிலேயே தென்படும். முழுமையான சூரிய கிரகண நிகழ்வு நீண்ட காலத்திற்கு ஒருமுறை நிகழும் அரிதான நிகழ்வாகும்.

    அந்த வகையில் 54 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழ்நத முழு சூரிய கிரகண நிகழ்வாக இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் அமைந்துள்ளது.

    இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் இருந்துள்ளது.

    இச் சூரிய கிரகணம் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் உள்ள 15 மாநிலங்களில் தென்பட்டுள்ளது.

    வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியை பார்க்க கூடியதாக இருக்கும் என்று நாசா முன்னதாக அறிவித்திருந்தது.

    இதற்குப் பிறகு 2044 இல் வட அமெரிக்கர்கள் இத்தகைய முழு சூரிய கிரகணத்தைக் காண்பார்கள் என்றும் நாசா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment