• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த மாதம் எப்படி இருக்கு? மே மாத ராசிபலன்கள்!

    பிறந்துள்ள மே மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    அந்த வகையில், தனுசு - மீனம் வரையான நான்கு ராசியினருக்கும் மே மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மாற்றங்கள் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் சேமிப்புகள் குறைவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் சூழ்நிலை கூட உண்டாக வாய்ப்புகள் இருப்பதால் பொறுமையும் நிதானத்தையும் கையாள வேண்டும். உடல் நலத்தில் கவனம் தேவை.

    வேலையை பொருத்தவரை நல்ல முன்னேற்றகரமான வாய்ப்புகள் வந்து சேரும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் அனைத்து நீங்கும். இருப்பினும் வேலை மாற்றம் செய்வதை தவிர்த்து விட்டு இருக்கும் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். இந்த மாதத்தில் எந்தவித முதலீடுகளையும் செய்யாமல் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. குடும்ப ரீதியாக சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பேச்சில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட அதிகளவு பண வரவு ஏற்படும். அதனால் சேமிப்பும் உயரும். உடல் ரீதியாக இதுவரை இருந்து வந்த உபாதைகள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கி எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலை பொருத்தவரை நல்ல லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஐயப்பனை வழிபட வேண்டும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றம் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை வருமானம் பெருகுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். மேலும் பணத்தை சேமித்து வைக்கும் முயற்சி செய்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கவும் சிலருக்கு யோகம் உண்டாக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும்.

    வேலையை பொருத்தவரை சாதகம் அற்ற சூழ்நிலையே நிலவுகிறது. தவறான புரிதல்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அதனால் பிரச்சனைகளும் ஏற்படும். எந்த சூழ்நிலையிலும் பொறுமையை கடைப்பிடிப்பதன் மூலம் வேலையில் எந்தவித பாதிப்பையும் சந்திக்காமல் இருக்க முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கு புதிய திட்டங்களை தீட்டி அதை செயலாற்றி அதில் வெற்றியும் பெறுவீர்கள்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதானத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. கடினமான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதை தன்னம்பிக்கையுடன் சந்தித்து செயல்பட வேண்டும். குடும்பத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிக அளவில் கோபம் கொள்வதை தவிர்க்க வேண்டும். பண வரவு தாராளமாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அதனால் பணத்தை சேமிக்க இயலாத சூழ்நிலை ஏற்படும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். கடின உழைப்பால் தான் எதிர்பார்த்த சலுகைகளை பெற முடியும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. சற்று மந்தமான சூழ்நிலையே உண்டாகும். தொழிலில் அதிக அளவு போட்டிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வராகி அம்மனை வழிபட வேண்டும்.

    Leave A Comment