ஒரே பார்வையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்!
தமிழகத்தில் 2023-24-ஆம் கல்வியாண்டு பிளஸ் 1 தேர்வெழுதிய மாணவ, மாணவிகளின் முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை இன்று (14) காலை வெளியிட்டது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.17% பேர் தேர்ச்சி
தேர்வு எழுதிய 8,11,172 மாணவ, மாணவிகளில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 91.17%. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவர்களில் 3,35,396(87.26%) பேரும், மாணவிகளில் 4,04,143(94.69%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த கல்வியாண்டில் 90.93 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு 0.24 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அரசுப் பள்ளிகள் 85.75%, அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 92.36%, தனியார் பள்ளிகள் 98.09%, இருபாலர் பள்ளிகள் 91.61%, பெண்கள் பள்ளிகள் 94.46% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1,964 பள்ளிகள் 100% தேர்ச்சி
241 அரசுப் பள்ளிகள் உள்பட 1,964 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
கோவை மாவட்டம் முதலிடம்
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவை மாவட்டம் 96.02% தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது.
95.56% தேர்ச்சி பெற்று ஈரோடு இரண்டாம் இடத்திலும், 95.23% தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
11ஆம் வகுப்பு தேர்வில் பாடவாரியாக சதமடித்த மாணவர்கள்
தமிழ் - 8
ஆங்கிலம் - 13
இயற்பியல் - 696
வேதியியல் - 493
உயிரியல் - 171
கணிதம் - 779
விலங்கியல் - 29
வணிகவியல் - 620
கணக்கு பதிவியல் - 415
பொருளியல் - 741
கணினிப் பயன்பாடு - 288
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 293
தேர்வு முடிவுகளை https://www.tnresults.nic.in/ , https://results.digilocker.gov.in/ , https://www.dge.tn.gov.in/ ஆகிய இணையதள முகவரிகளை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 4 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பிளஸ்-2 பொதுத்தோ்வு முடிவுகள் கடந்த 6 -ஆம் தேதி வெளியாகின. இதைத்தொடர்ந்து, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 10-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
Leave A Comment