இந்த மாதம் எப்படி இருக்கு? வைகாசி மாத ராசிபலன்கள்!
பிறந்துள்ள வைகாசி மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில், மேஷம் - கடகம் வரையான முதல் நான்கு ராசியினருக்கும் மே மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தொட்டது தொடங்கும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கி குடும்ப ஒற்றுமை உண்டாகும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதனால் உயர் பதவி கிடைப்பதற்கு சம்பள உயர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு நல்ல லாபம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் தொழிலை முன்னேற்றுவதற்குரிய வாய்ப்புகளும் வந்து சேரும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஆதாயம் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்படும். அதே சமயம் விரையங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். இதில் பெரும்பாலும் சுப விரயம் ஏற்படும் சூழ்நிலையே உண்டாகும். இதுவரை வாழ்க்கையில் இருந்து வந்த பதட்ட நிலை மாறி தீர்க்கமான முடிவு எடுத்து செயலாற்றுவீர்கள்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். யாரையும் நம்பி எந்த வேலையும் தராமல் இருப்பது வேலையில் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ள உதவும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். மறைமுக எதிரிகளால் ஒரு சிலருக்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நந்தி பகவானை வழிபட வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உன்னதமான மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்படும். எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறும். புதிதாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் லாபம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலை முன்னேற்றுவதற்கும் சொந்த இடத்திற்கு தொழிலை மாற்றுவதற்கும் சிறந்த மாதமாக இந்த மாதம் திகழும்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வராகி அம்மனை வழிபட வேண்டும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை இதுவரை இருந்து வந்த பணத்தடைகள் அனைத்தும் நீங்கி பண வரவு ஏற்படும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை உண்டாகும். புதிதாக இடம் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு ஏற்படும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். சற்று கவனத்துடன் வேலையை செய்வதன் மூலம் வேலையில் எந்த வித பிரச்சனைகளும் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். தொழிலை முன்னேற்றுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு அந்த முயற்சியில் வெற்றியும் பெறுவீர்கள்.
இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையை வழிபட வேண்டும்.
Leave A Comment