• Login / Register
  • ஆன்மிகம்

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரைத் திருவிழா ஆரம்பம்!

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் இன்று (12) நடைபெற்றது. 

    இன்று முதல் தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்குமாசி வீதிகளை வலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் வருகிற ஏப். 19-ஆம் தேதியும், மறுநாள் 20-ஆம் தேதி திக்குவிஜயமும், அடுத்த நாள் 21-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணமும், அன்றிரவு திருக்கல்யாண கோலத்தில் சுவாமி அம்மன் பூப்பல்லக்கு பவனியும், 22-ஆம் தேதி அதிகாலையில் நான்குமாசி வீதிகளில் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பான நிகழ்வுகளான கள்ளழகா் எதிர்சேவை ஏப்ரல் 22 ஆம் தேதி இரவும், ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.


    Leave A Comment