• Login / Register
  • ஆன்மிகம்

    தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா ஆரம்பம்!

    புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று (6) ஆரம்பமாகியுள்ளது.

    சித்திரை திருவிழா 18 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.

    முன்னதாக, பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டுது.பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த துணிகளை கொண்டு பிரமாண்ட கொடிமரத்தில் மங்கல வாத்தியம் முழங்க நந்தியம் பெருமான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

    தொடா்ந்து, நாள்தோறும் பல்லக்கிலும், சிம்மம், மேஷம், வெள்ளி மயில், சந்திர பிரபை, முத்துப்பல்லக்கு, பூதம், வெள்ளி யானை உள்பட பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது.

    Leave A Comment