• Login / Register
  • செய்திகள்

    யுபிஎஸ்சி முடிவுகள் வெளியீடு: 1,016 பேர் தேர்ச்சி

    யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று (16) வெளியிடப்பட்டுள்ளன. 

    கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எழுத்துத் தேர்வும், அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி முதல் நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய இறுதி முடிவுகள் இன்று (ஏப். 16) வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மொத்தம் 1,016 பேர் மத்திய அரசு குடிமைப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆதித்யா ஸ்ரீவத்ஸாவா அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    தேர்வு முடிவுகளை அறிய: https://upsc.gov.in/sites/default/files/FR-CSM-23-engl-160424.pdf


    Leave A Comment