• Login / Register
  • மேலும்

    அதிகரிக்கும் ஆபாச படங்கள்: இன்ஸ்டாகிராமின் புதிய வசதி!

    பாலியல் மோசடிகளுக்கு எதிரான இன்ஸ்டாகிராம் முன்னெடுப்பின் பகுதியாக, இன்ஸ்டாகிராம் செயலியில் நேரடி குறுஞ்செய்திகள் பகுதியில் இனி ஆபாசப்படங்கள் மங்கலாக்கப்படும் என இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.

    ஆபாச படங்களை மங்கலாக்கும் வசதி 18 வயதுக்கு குறைவாக இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மட்டும் எனவும் 18 வயது நிரம்பியவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியுடன் படங்கள் பார்ப்பதற்கான வசதி அளிக்கப்படும் எனவும் இன்ஸ்டாகிராம் தெரிவிக்கிறது.

    மெட்டாவின் மற்ற செயலிகளில் இந்த வசதி அறிவிக்கப்படவில்லை.

    பாலியல் மோசடியில் ஈடுபவர்கள் போலி கணக்குகளில் இருந்து இளம் வயதினருக்கு ஆபாச படங்கள் அனுப்பி, அவர்களின் ஆபாச படங்களையும் பெற்று விடுகிறார்கள். பின்னர் அதை வைத்து மிரட்டி பணம் பறிக்கிறார்கள்.இப்படியான புகார்கள் தொடர்ச்சியாக பெறப்பட்டு வருவதாக அமெரிக்க காவல் துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



    Leave A Comment