• Login / Register
  • செய்திகள்

    முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களில் 75 மி.மீற்றர் பலத்த மழை!

    இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டம், கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று (09) பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் 75 மில்லி மீற்றர் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

    வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பிரதேசங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பகல் வேளையில் மக்கள் அநாவசிய பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறும் அதிகளவு நீராகாரங்களை அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

    வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பரவலாக மழை பெய்யக்கூடும்.

    இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

    Leave A Comment