• Login / Register
  • செய்திகள்

    கிளிநொச்சியில் இன்று அடையாள உண்ணாவிரதம்!

    தியாகத் தாய் அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு கிளிநொச்சியில் இன்று (19) வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரதம் மற்றும் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட உள்ளது.

    இலங்கை, இந்திய அரசுகளை நோக்கி இரண்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார் அன்னை பூபதி. நீரை மட்டும் அருந்தியவாறு ஒரு மாதகாலம் உறுதியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த அன்னை பூபதி 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி உயிர்நீத்தார்.

    அவரது 36 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழர் தாய்கம் உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களிலும் அனுட்டிக்கப்பட உள்ளது.

    இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரதமும் நினைவேந்தல் நிகழ்வும் முன்னெடுக்கப்பட உள்ளது.

    கிளிநொச்சி சேவைச் சந்தை முன்றலில் இன்று காலை 08.00 மணிக்கு தியாகத் தாய் அன்னை பூபதியின் அடையாள உண்ணாவிரதமும் நினைவேந்தல் நிகழ்வும் ஆரம்பமாகி இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment