• Login / Register
  • மேலும்

    வெளிவந்த திடுக்கிடும் தகவல்: பேஸ்புக் பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு

    பேஸ்புக் பயனர்களின் ரகசிய தகவல்களை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் மெட்டா நிறுவனம் பகிர்ந்துகொண்டதாக ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

    மெட்டா குழுமத்தின் சமூக வலைத்தளமான பேஸ்புக் மீது அதன் பயனர்கள் தொடர்ந்திருக்கும் நம்பிக்கை முறிவு வழக்கின் நீதிமன்ற ஆவணங்களிலேயே  இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பேஸ்புக், தனது பயனர்களின் நேரடி குறுஞ்செய்திகளை பார்க்க நெட்பிளிக்ஸுக்கு அனுமதி அளித்ததாக அந்த ஆவணங்களிலிருந்து தெரிய வந்துள்ளது. நெட்பிளிக்ஸ் பயனர்களின் விருப்பத்தை தெரிந்துகொள்ள பேஸ்புக் இதனை செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும் நெட்பிளிக்ஸ் உடனான விளம்பரதாரர் உறவை இழக்காமல் இருக்க தனது விடியோ சேவைகளை பேஸ்புக் குறைத்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    நெட்பிளிக்ஸின் நிறுவனரும் முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான ரீட் ஹேஸ்டிங்க்ஸ், பேஸ்புக்கிலும் இயக்குநர் குழுவில் இருந்துள்ளார்.

    ரீட்டிடம் நீதிமன்றம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளதாக வெளியான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சந்தை ஆதிக்கம் மற்றும் பயனர்களின் விருப்பம் சார்ந்து மிகப்பெரும் வணிக நிறுவனங்களிடையேயான ரகசிய உறவுகள் குறித்து இந்த நீதிமன்ற ஆவணம் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.



    Leave A Comment