• Login / Register
  • செய்திகள்

    ஏப்ரல்-01: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

    நிதியாண்டு தொடக்கம் பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றத்தை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மாற்றம் ஏதும் இன்றி அதேவிலையில் தொடர்கிறது.

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பெட்ரோல் டீசல் விலை 100 ஐத் தாண்டி உச்சத்தைத் தொட்டது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கலக்கம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கின.

    இதனிடையே 2022 மே 21 ஆம் தேதி, மத்திய அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து சென்னையில் 2022 மே 22ஆம் தேதி முதல் பெட்ரோல் லிட்டர் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    எனவே நிதியாண்டு தொடக்கத்திலும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரே விலை நீடிக்கிறது.


    Leave A Comment